திருவள்ளூர்: வயிற்று வலி... விரைவு ரயிலை வழியிலேயே ஓட்டுநர் நிறுத்தியதால் பரபரப்பு


பிரதிநிதித்துவப் படம்.

திருவள்ளூர்: விரைவு ரயில் ஓட்டுநர் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம்-திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சப்தகிரி விரைவு ரயில் நேற்று இரவு திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று இரவு 9 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் யுகேந்திரன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு துடித்தார். இதனால் அவர் ரயிலை திருவள்ளூர் ரயில் நிலையம் நடைமேடை எண்:03-ல் நிறுத்தி விட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ரயிலில் இருந்த பயணிகளில் ஒரு பகுதியினர் ரயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரயில் மூலமாக சென்னை சென்றனர். தொடர்ந்து, ரயில்வே உயரதிகாரிகளின் உடனடி நடவடிக்கையின் விளைவாக இரவு 10.15 மணியளவில் மாற்று ஓட்டுநர் கலையரசன் மூலம் சென்னை சென்றது. இச்சம்பவத்தால் திருவள்ளூர் பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

x