சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது இல்லத்தரசிகளையும், நகை பிரியர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இன்றைய காலை நேர வர்த்தக நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,040-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ98க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.