ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை


ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்​குச் சென்ற சேகு இருத​யம், மெஜோ ஆகியோ​ருக்​கு சொந்​தமான 2 விசைப் ​படகுகளை மன்னார் கடல் பகுதி​யில் கடந்த 4-ம் தேதி பறிமுதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி 14 மீனவர்​களைக் கைது செய்​தனர். பின்னர் அவர்கள் வவுனியா சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

மீனவர்​களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைவரும் மன்னார் நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்​தப்​பட்​டனர். அப்போது 14 மீனவர்​களுக்​கும் இலங்கை ரூபாய் தலா 7 லட்சம் (இந்திய மதிப்​பில் ரூ.2 லட்சம்) அபராதம் விதித்து, அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரஃபிக் உத்தர​விட்​டார்.

x