புதுச்சேரி ஜிப்மரில் ஜார்க்கண்ட் பெண்ணின் முதுகிலிருந்து 5 கிலோ கட்டி அகற்றம்: 6 மணிநேர அறுவை சிகிச்சை


புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஜார்க்கண்ட் பெண்ணின் முதுகில் இருந்த சுமார் 5 கிலோ கட்டி வெட்டி அகற்றி ஆறு மணிநேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 38 வயதுடைய பெண் முதுகில் கட்டியுடன் ஜிப்மரில் சிகச்சைக்கு சேர்க்கப்பட்டார். உறங்குவதற்கும், அன்றாடம் செயல்படுவதற்கும் அவர் சிரமப்பட்டார். அதனால், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவைச் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது.

அதனையடுத்து அறுவைச் சிகிச்சைத்துறை உதவிப் பேராசிரியர் பத்மலட்சுமி பாரதி மோகன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர். அதனையடுத்து 5 கிலோ கட்டியில் பெரும்பகுதி அகற்றப்பட்டது. தற்போது நோயாளி குணமடைந்துள்ளார். அவர் படுத்துறங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஜிப்மரின் அறுவைச் சிகிச்சை, மயக்கவியல், ரத்தமாற்றவியல் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

x