சென்னை: அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை ஏற்று, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சு.சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரப்பன் அமர்வு, எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.