கோவை: நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்


கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுார் பாடி

கோவை: நாளை கோவை ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மைய வளாகத்தில் நாளை (டிசம்பர் 20ம் தேதி) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப் படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும், விவரங்களுக்கு 0422 - 2642388 என்ற தெலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x