சூறாவளி காற்று: இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழக – தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நிலவி வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x