தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு... ஆந்திராவை நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல், ஆந்திர கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கி.மீ வேகம் முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

x