சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயல் கன மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், சேத மடைந்த அனைத்து வீடு களுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.
விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகையையும் திமுக அரசு வழங்கவில்லை. இதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளைவழங்க வலியுறுத்தியும், விழுப்புரம்மாவட்டஅதிமுக சார்பில் டிச.21-ம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.