வர்த்தக நிலவரம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்த தங்கத்தின் விலை இருந்து வருகிறது.

அதன்படி, இன்றைய காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,135-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளி விலை அதே விலையில் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில் தங்கத்தின் விலை அடுத்தடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

x