தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.