சென்னை: நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், ‘தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வருகிறது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்
இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 19ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.