புதுச்சேரி: இந்தியா- பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தையொட்டி நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து புதுவை முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.
அரசு, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து 1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன் குமார், காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங்., ஐஜி டாக்டர் அஜித்குமார் சிங்லா, அரசுச் செயலர் பங்கஜ் குமார் ஜா,மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன். டிஐஜி சத்தியசுந்தரம், கடலோர காவல் படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்று நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.