சென்னை விமான நிலையத்தில் செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு!


உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் - நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. மொத்த 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில் இருவருமே தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்நிலையில் 14வது மற்றும் கடைசி சுற்று போட்டியில் 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 18 வயதிலேயே குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியனான குகேஷ் இன்று காலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள், ரசிகர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

x