க​னிமவளத்​துறை அலுவல​கங்​களில் கணினிகளை உடைக்கும் போராட்டம்: மணல் லாரி உரிமை​யாளர் சங்க கூட்​டமைப்பு அறிவிப்பு


சென்னை: தமிழக மணல் லாரி உரிமை​யாளர்கள் சங்கங்​களின் கூட்​டமைப்பு வெளி​யிட்ட அறிக்கை: தமிழகத்​தில் கடந்த 10 ஆண்டு​களுக்கும் மேலாக கனிமவளத்​துறை​யில் நடக்​கும் நடைமுறை சிக்​கல்​களை​யும் முறை​கேடு​களை​யும் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு​களை​யும் களைய வேண்டு​மென்​றால், ஒட்டு மொத்த தமிழகம் முழு​வதும் மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்​டும். இதுகுறித்து பலமுறை வலியுறுத்​தி​யும் இந்நாள் வரையில் இந்த திட்​டத்தை கனிமவளத்​துறை நடைமுறைப்​படுத்​தவில்லை.

அனைத்து மலை மற்றும் கல்கு​வாரி​களி​லும் 100 ரசீது பெற்றுக்​கொண்டு அரசுக்கு தெரியாமல் 1,000 லோடு மலையை வெட்டி எடுக்கின்​றனர். காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், திரு​வண்ணாமலை மற்றும் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள குவாரி​களில் கடந்த 5 ஆண்டு​களுக்​கும் மேலாக நடைபெறும் இதுபோன்ற முறை​கேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஆய்வுக்கு உட்படுத்த வேண்​டும்.

மீண்​டும் முறை​கேடுகள் நடைபெறாமல் இருக்க மின்னணு வழி கட்டண ரசீது முறை மூலம் கனிமங்களை எடுக்க வேண்​டும். கனிம கொள்​ளை​யை​யும், கடத்​தலை​யும் தடுத்து நிறுத்த மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்​டும் என்ப​தோடு, இதன்​மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்​பை​யும் தடுத்து நிறுத்த முடி​யும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இன்னும் 2 வாரங்​களுக்​குள் கணினி முறையை நடைமுறைப்​படுத்த, கனிமவளத்​துறை ஆணையர் முன்​வர​வில்லை எனில், கனிமவளத்​துறை அலுவலங்​களில் பிற பயன்​படு​களுக்காக உள்ள கணினிகளை உடைக்​கும் நூதன ​போராட்​டத்தை வரும் 23-ம் தேதி ​காலை 11 மணிக்கு நடத்து​வோம். இவ்​வாறு அ​தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x