அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது


சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடக்கிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூட்டத்தையும், ஆண்டுக்கொருமுறை பொதுக்குழு கூட்ட வேண்டும். அதன்படி, ஆண்டுக்கான அதிமுக குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் மற்றும் இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால். அதை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

x