அமராவதி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கரூர் ஊழியர் பத்திரமாக மீட்பு


பழனிசாமியை மீட்டு அழைத்து வந்த மீட்பு படையினர்.

கரூர்: கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் சோமூர் அமராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி (54) பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். பழனிசாமி நேற்று (டிச.13) நீரேற்று நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்து இன்று (டிச.14) புறப்பட்ட போது அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 75,751 கனஅடி நீர் சென்றதால், அதிகப்படியான வெள்ளப்பெருக்கால் வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திற்குள் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து அவர் நிறுவனத்திற்கு அளித்த தகவலின்பேரில் அவர்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் பழனிசாமியை மீட்டனர்.

x