வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த யானைக் குட்டி: குற்றாலம் அருவியில் கரை ஒதுங்கியது


தென்காசி: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த யானைக் குட்டி குற்றாலம் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் இன்று மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இந்நிலையில், இன்று காலையில் குற்றாலம் அருவியில் இருந்து சிறிது தொலைவில் தர்ப்பணம் கொடுக்கும் சத்திரம் பின்னால் யானைக் குட்டி உயிரிழந்து கிடந்தது.

சுமார் 3 வயதுள்ள ஆண் யானை குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தது தெரியவந்தது. நேற்று அருவியில் ஏற்பட்ட கடும் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூராய்வுக்கு பின்னர் யானையின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

x