சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,160 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக தடாலடியாக குறைந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,230க்கு விற்பனையானது. அதேபோல நேற்று சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,840க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைத்து ரூ.7,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.1,160 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.101க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.100க்கு விற்பனையாகிறது.