சென்னை: முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.12 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அவருக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.