கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிப்பு


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்தபோதும் பெரும் சேதம் ஏற்படவில்லை. எனினும், மழைநீர் பெருக்கெடுத்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரில் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 4,121 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து பகுதியில் 540 மி.மீ. மழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு பாதிக்கும் குறைவாகவே உள்ளது. கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தாலும், அதிக அளவில் வெளியேற்றப்படவில்லை. அணைகளில் இருந்து மொத்தம் 1,500 கனஅடி வீதம் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், காட்டாற்று வெள்ளமும், ஊர்களில் பெய்த மழை நீரும் மட்டுமே ஆங்காங்கே உள்ள கால்வாய்கள் வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி அணைக்கட்டுக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வெள்ளத்தின் அளவு அபாயகட்டத்தை எட்டவில்லை என்ற போதிலும், தாமிரபரணி கரையோரமுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. தண்ணீரை வடியவைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப்நந்தூரி நேற்று பார்வையிட்டார்.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டன.

திருச்செந்தூருக்கு வர வேண்டாம்: திருச்செந்தூர் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் கடற்கரையில் தங்கி, தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை நிலவரப்படி காயல்பட்டினத்தில் 105 மி.மீ., திருச்செந்தூரில் 41 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் சூழல் உள்ளதால் இன்றும், நாளையும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்குவதை தவிர்க்க வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: தென்காசி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி நீரின் ஒரு பகுதி சந்நிதி பஜார் வழியாக சீறிப் பாய்ந்தது. இதனால், இந்த சாலை ஆறுபோல காணப்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராமநதி மற்றும் குண்டாறு அணைகள் நிரம்பியுள்ளன. மற்ற அணைகள் நிரம்பி வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெரியளவில் மழை பெய்யவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால், மோதிரமலை - குற்றியாறு இடையேயான தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.

தரைப்பாலம் மூழ்கியது: கன்னியாகுமரி மாவட்​டத்​தில் பெரியள​வில் மழை பெய்ய​வில்லை. மேற்​குத் தொடர்ச்சி மலை​யில் பெய்த க​னமழை​யால், மோ​திரமலை - குற்றி​யாறு இடையேயான தரைப்​பாலத்தை ​காட்​டாற்று வெள்​ளம் இழுத்​துச்​ சென்​றது.

x