கனமழை எச்சரிக்கை: நீலகிரி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து


குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக இன்று (டிச.13) மற்றும் நாளை (டிச.14) ஆகிய இரண்டு நாட்கள் உதகை- மேட்டுப்பாளையம் மற்றும் உதகை -குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மழைக்காலங்களில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

x