கனமழை: இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 11 மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (டிசம்பர் 13) மற்றும் நாளை (டிசம்பர் 14ம் தேதி) சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று சேலம், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கரூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இன்று திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

x