கொலக்கம்பை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகள் - விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்!


குன்னூர்: குன்னூர் கொலக்கம்பை அருகே இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொலக்கம்பை, தூதூர்மட்டம், முசாபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது மேரக்காய் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து வந்த ஐந்து யானைகள் தற்போது தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் அருகில் உள்ள மேரக்காய் தோட்டங்களில் புகுந்து அனைத்தையும் சேதப்படுத்தி செல்கிறது.

இருந்தபோதிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்க வனத்துறையினர் தீ மூட்டி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் உலா வரும் பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம் என்றும், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்க யாரும் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

x