தொடரும் கனமழை: இன்று சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை


தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி இன்று சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று டிசம்பர் 12ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x