பாம்பன்: இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கில குட்டி


பாம்பன் பாலம் அருகே கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம்

ராமேசுவரம்: பாம்பன் பாலம் அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ராட்சத நீலத் திமிங்கில குட்டி ஒன்று இன்று காலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 21 தீவுகள் 4,223 வகையான கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில் திமிங்கலம், கடல் பசு, டால்பின் உள்ளிட்ட பாலூட்டிகளும் அடங்கும். இந்நிலையில், Blue Whale எனப்படும் ராட்சத நீலத் திமிங்கிலத்தின் குட்டி ஒன்று இறந்த நிலையில் பாம்பன் பாலம் அருகே உள்ள கடற்கரையில் புதன்கிழமை காலை கரை ஒதுங்கியது.

இதைக்கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, மண்டபம் வனத்துறையினருடன், மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்தியக் கடல் மீன்வள நிலைய ஆராய்ச்சியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று திமிங்கலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கால்நடை மருத்துவர் உடற்கூறாய்வுக்குப் பின், இன்று மாலை புதைக்கப்படும் என கூறப்படுகிறது.

x