திருவண்ணாமலையில் மகா தீபம்: பக்தர்களுக்கு மலையேற அனுமதியில்லை!


திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவினை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள அன்று மலையேறிச் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறுகிற கார்த்திகை மகா தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மகா தீபத் தன்று திருவண்ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 13ம் தேதி மாலை மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலையேறிச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

x