திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளை மறுதினம் மகா தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் நாளை டிசம்பர் 12ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொடர்ந்து மூட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மகா தீபத் திருவிழாவினையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை நாளை டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.