கிறிஸ்​தவர்​கள், விஸ்​வகர்மா திட்டம் குறித்த உதயநிதி பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்


சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணியம் விடுத்த அறிக்கை: அண்மை​யில் சென்னை சேத்துப்​பட்​டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய துணை முதல்வர் உதயநிதி, கிறிஸ்​தவர்கள் பங்களிப்​பால்​தான் சமூகநீதி தமிழகத்தில் வாழ்​கிறது என்றும், மாணவர்களை பள்ளி​யில் இருந்து வெளி​யேற்றி குலக் கல்வியை ஏற்படுத்த மத்திய அரசு விஸ்வகர்மா திட்​டத்தை அமல்​படுத்தி உள்ளது எனவும் தெரி​வித்​துள்ளார்.

இது அப்பட்​டமான பொய். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்​கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு அனைத்து சமூகத்​தின் மாணவர்​களுக்​கும் பாகுபாடின்றி கல்வி கற்றுத்​தரப்​பட்டது குறித்து மகாத்மா காந்​தி​யின் சீடர் தரம்​பால், ‘அழகிய மரம்’ என்னும் புத்தகத்​தில் எழுதி​யுள்​ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லினும் திமுக​வினரும் அந்த புத்​தகத்தை படித்​துப்பார்க்க வேண்​டும். விஸ்​வகர்மா எனும் படைப்​பாளிகளை ஊக்​கப்​படுத்​தும் ​திட்​டத்தை தமிழக அரசு அமல்​படுத்த வேண்​டும் என கூறியுள்ளார்​.

x