குன்னூர்: குன்னூரில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை குட்டியை பின் தொடர்ந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகே அட்டடி கிராமத்தில் நள்ளிரவில் குட்டியுடன் காட்டெருமை ஒன்று சாலையில் நடந்து வந்துள்ளது.
அப்போது அங்கு வந்த சிறுத்தை இதனை பின் தொடர்ந்து சென்றது. இது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.