இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் கோவையில் காலமானார்.
உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரா.மோகன் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
1980-ல் கோவை மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.மோகன், 1989-ல் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவினர் பலர் முன்னாள் எம்.பி இரா.மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.