கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை 2.30 மணி அளவில் காலமானார். கடந்த ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1932-ல் கர்நாடக மாநிலம் சோமஹல்லியில் பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா, 1962-ல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி (1962-71), காங்கிரஸ் கட்சி (1971 - 2017) மற்றும் பாஜக-வில் (2017 - 2023) பணியாற்றி உள்ளார். 2023-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர் அதன் பின்னர் வயது முதிர்வு காரணமாக தன்னால் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது என தெரிவித்து தீவிர அரசியலில் இருந்து முற்றும் ஒதுங்கியிருந்தார்.

2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், 2009 முதல் 2012 வரை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

x