கோவை: கோவை மாவட்டம் சோமமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ். செலவு சீட்டுகளை ஆய்வு செய்ததில் பல்வேறு இனங்களில் ஊராட்சிக்கு மற்றும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதியில் ஒரு பணி மேற்கொள்ளப்படும் போது டெண்டர் விதிமுறைகள், பராமரிப்பு மதிப்பீடுகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மேற்பார்வை, கொள்முதல் செய்வதில் விதிமுறைகை பின்பற்றாதது, விலைப் புள்ளிகள் பெற்று பணிகள் மேற்கொண்டதில் குறைபாடுகள் உள்ளதாக புகார் தெரிவித்து நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
பல்வேறு முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டதால் கோவை, சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் 2025 ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் டிசம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.