கரூரில் டிச.14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்: இன்று முதல் டிச.13ம் தேதி வரை வழக்குகளுக்கு தீர்வு


கோப்புப் படம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் டிச.14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று (டிச.9ம் தேதி) முதல் டிச.13ம் தேதி வரை வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளின் வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ண ராயபுரம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்து வழக்காடிகள் பயனடையலாம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து, தொழிலாளர் நல வழக்குகள் என விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், இன்று (டிச.9ம் தேதி) முதல் வரும் டிச.13ம் தேதி வரை பணியில் உள்ள நீதிபதிகள் கொண்டு அமர்வு ஏற்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அமர்வு இயங்கும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தொலைப்பேசி எண்: 04324 296570 தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

x