ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிக்காக விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி: திருமாவளவன் அறிவிப்பு


சென்னை: ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிக்காக விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது சமூக வலைதள பதிவு: “அண்மையில் தமிழகத்தைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கென ரூ.10 லட்சம் வழங்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலா ஒரு மாத சம்பளத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதல்வரிடம் வழங்கப்படும்” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

x