கேள்விகளுக்கு பதில்தர வேண்டியது அரசின் கடமை: செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி​யின் உருட்​டல், மிரட்​டல்​களுக்​கெல்​லாம் பாஜக பணியாது. கேள்வி கேட்​டால் பதில் தரவேண்​டியது அரசின் கடமை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரி​வித்​துள்ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை: அதானி நிறு​வனத்​துடன் தமிழக மின்சார வாரி​யத்​துடனான ஒப்பந்​தங்கள் தொடர்ந்து கொண்​டிருப்பதை செந்தில் பாலாஜி மறைக்க முயற்சிக்​கிறார். மேல் முறை​யீட்டு ஆணையத்​தின் உத்தர​வின்​படியே, ரூ.568 கோடி கட்டணம் செலுத்​தி​ய​தாகக் கூறும் அமைச்​சர், கடந்த 2019-ம் ஆண்டு, மேல்​முறை​யீட்டு ஆணையத்​தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021-ம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்​டார்.

உண்மை​யில் அதானி நிறு​வனத்​துக்​குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, அமைச்சர் வெளிப்​படை​யாகத் தெரி​விப்​பாரா, அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

அதானி நிறு​வனத்​திடம், தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்​தப்​பட்ட விலையான ரூ.7.01 விலை​யிலேயே மின்​சாரம் வாங்​கிக்​கொண்டு, அதற்​காக, கடந்த நிதி​யாண்​டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்​ப​தாக, அதானி நிறு​வனத்​தின் நிதி​நிலை அறிக்கை​யில் குறிப்​பிடப்​பட்​டிருக்​கும்​போது, எந்த அடிப்​படை​யில், ரூ.5.10-க்கு ஒரு யூனிட் மின்​சாரம் என்று திமுக ஆட்சி​யில் கொள்​முதல் செய்​வ​தாகக் குறிப்​பிடு​கிறார், தனியார் நிறு​வன பட்டியலில் அதானி நிறு​வனம் உள்ளதா இல்லையா?

திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கை​யிலும் கேள்வி எழுவது இயல்பு. அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்​பணத்தை எடுத்​துச் செலவிடும்​போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்​தான் செய்​யும். அதற்​குப் பதிலளிக்க வேண்​டியது அரசின் கடமை. அதை விடுத்து, வழக்கு தொடரு​வோம் என்ற உருட்டல் மிரட்​டல்​களுக்கு எல்லாம், தமிழக பாஜக பணிந்து செல்​லாது. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பாமக அறிக்கை: பாமக செய்தித்​தொடர்​பாளர் கே.பாலு வெளி​யிட்ட அறிக்கை​: தமிழ்​நாடு மின்சார வாரி​யத்​துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்​ததாக அமெரிக்க நீதி​மன்​றத்​தில் கூறப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்டு குறித்து பாமக 15 நாட்​களுக்கு முன் கேள்வி எழுப்​பி​யிருந்​தது.

அரசுக்கு எதிராக குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்​தால் அவதூறு வழக்கு தொடரப்​படும் என்று செந்தில் பாலாஜி மிரட்டல் விடுக்​கிறார். இதற்கு எல்லாம் பாமக ஒருபோதும் அஞ்சாது. செந்​தில் பாலாஜிக்கு துணிச்சல் இருந்​தால், பாமக முன்​வைத்த குற்​றச்​சாட்டுகள் குறித்​து​​ வழக்​கு தொடரட்​டும். அந்​த வழக்​கை எ​திர்​கொள்​ள பாமக த​யாராக இருக்​கிறது.

x