பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்


சென்னை: பொதுச்​செய​லாளர் பதவி​யில் இருந்து பழனிசாமியை நீக்​கும் காலமே அதிமுக​வுக்கு பொற்​காலம் என்று சென்னை​யில் நேற்று நடைபெற்ற அதிமுக தொண்​டர்கள் உரிமை மீட்​புக்​குழு கூட்​டத்தில் முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் தெரி​வித்​துள்ளார்.

அதிமுக தொண்​டர்கள் உரிமை மீட்​புக்​குழு​வின் மாநில நிர்​வாகிகள் மற்றும் மாவட்ட செயலா​ளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடைபெற்​றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்​சந்​திரன் தலைமை​யில் நடைபெற்ற ஆலோசனை கூட்​டத்​தில், ஃபெஞ்சல் புயல் தாக்​கத்​தால் பெய்த அதிக​னமழை காரணமாக உயிரிழந்​தவர்​களுக்​கும், பல்லா​வரத்​தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்​த​தால் உயிரிழந்​தவர்​களுக்​கும் இரங்கல் தெரிவிக்​கப்​பட்​டது.

மேலும் மறைந்த முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு நிரந்தர பொதுச்​செய​லாளர் பதவி வழங்​கியதை நீக்​கியதற்கு கண்டனம் தெரி​வித்​தும், மதுரை​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்​ப​தில் திமுக இரட்டை வேடம் போடு​வதாக கூறி கண்டனம் தெரி​வித்​தும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தாமதப்​படுத்து​வதாக திமுக அரசை கண்டித்​தும் தீர்​மானங்கள் நிறைவேற்​றப்​பட்டன.

பின்னர் கூட்​டத்​தில் முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் பேசி​ய​தாவது: அதிமுக​வில் 1989-ம் ஆண்டுக்கு முன்பு பழனிசாமி உறுப்​பினராக கூட இல்லை. அவர் பேசுவதெல்​லாம் பொய். நான் ஜானகி அணியில் இருந்து ஜெயலலி​தாவுக்கு பாதக செயலை செய்​ததாக பழனிசாமி உருவப்​படுத்​தினார். அதே ஜானகிக்கு இன்று பழனிசாமி நூற்​றாண்டு விழா எடுத்​திருக்​கிறார். இது தான் காலத்​தின் கோலம்.

ஜெயலலிதாவை கவுரவிக்​கும் வகையில் நிரந்தர பொதுச்​செய​லாளர் பதவி வழங்​கியதை ரத்து செய்து, பொதுச்​செய​லாளர் பதவியை பழனிசாமி கைப்​பற்றி இருக்​கிறார். இது ஜெயலலி​தாவுக்கு செய்த துரோகம். பொதுச்​செய​லாளர் பதவி​யில் இருந்து பழனிசாமியை நீக்​கும் காலமே அதிமுக​வுக்கு பொற்காலம். விரைவில் தொண்​டர்​களின் இயக்​கமான அதிமுக தொண்​டர்கள் கைக்கு வரும். விரை​வில் மதுரையில் மாநாடு நடத்தப்​படும். அதனைத் தொடர்ந்து கோவை​யிலும், இறுதி​யில் சென்னை​யிலும் நடத்​தப்​படும். இவ்வாறு கூறினார்.

இக்கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர்​கள் ஆர்​.​வைத்​திலிங்​கம், வெல்​லமண்டி நட​ராஜன், தரு​மர் எம்​.பி., மனோஜ் பாண்​டியன் எம்​எல்ஏ, மருது அழகுராஜ் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்​.

x