16-வது நிதிக் குழு முன் மாநிலங்​களும் அவை எதிர்​கொள்​ளும் சவால்​களும்


பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்​குழு​வின் கூட்டம் தமிழகத்​தில் நடைபெற்​றது. உலகளாவிய மாற்​றங்​களால் உருவாகி​யுள்ள புதிய வாய்ப்பு​கள், இந்த நிதிக்​குழு எடுக்க உள்ள முடிவு​கள், நாட்​டின் அடுத்த ஐந்தாண்​டு​களுக்கான நிதி செயல்​பாடு​களுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்​வரும் காலங்​களில் இந்தியா தேர்வு செய்​யப்​போகும் பொருளா​தாரப் பாதை​யின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடிய​வை​யாகும்.

உலக அளவில் பல முக்கிய மாற்​றங்கள் நிகழ்ந்து வரும் இவ்வேளை​யில், 16-வது நிதிக்​குழு தனது பணியை மேற்​கொண்​டுள்​ளது. தற்போது வளர்ந்து வரும் புதிய முறை​களான, நட்புறவு நாடு​களுக்கு வணிகச் செயல்​பாடுகளை மாற்றுதல் மற்றும் உற்பத்தி மற்றும் முதலீடுகளை மீண்​டும் சொந்த நாட்​டில் தொடங்​குதல் உள்ளிட்டவை சர்வதேச வணிகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளை மறுகட்​டமைப்பு செய்​கின்றன. இந்த மாற்​றங்கள் இந்தியா மற்றும் தமிழகத்​துக்கு தனித்து​வமான வாய்ப்பு​களை​யும் வழங்​கு​கின்றன.

இந்தவாய்ப்புகளை பயன்​படுத்​திக் கொள்ள, மாநிலங்​களுக்​குச் சமமான மறுபங்​கீடு மற்றும் தமிழகம் போன்ற சிறப்​பாகச் செயல்​படும் மாநிலங்​களில் வளர்ச்​சியை ஊக்கு​வித்தல் உள்ளிட்ட சவால்கள் இந்த நிதிக்​குழு​வின் முன்னுள்​ளது. கடந்த 1951-ம் ஆண்டு, முதல் நிதிக்​குழு அமைக்​கப்​பட்​ட​திலிருந்து, தொடர்ந்து வந்த ஒவ்வொரு நிதிக்​குழு​வும், அந்தந்த காலத்​தின் நிதிச் சிக்​கல்​களுக்கு ஏற்ப தங்களது அணுகு​முறையை மாற்றியமைத்​துக் கொண்டன.

ஒவ்வொரு நிதிக்​குழு​வும் செங்​குத்​துப் பகிர்​வின் வழியாக மாநிலங்​களுக்கான பகிர்வை அதிகரிப்​பதன் மூலம் சமமான வளப்​பங்​கீட்டை அடைய​வும், கிடைமட்ட பகிர்​வின் வழியாக குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலங்​களுக்கு நிதி ஒதுக்​க​வும் முயற்சி செய்துள்ளன. ஆனால், அவர்​களின் நோக்​கங்​கள், அரசின் செயல்​பாடுகள் இடையில் பெரும் இடைவெளி இருந்​தது.

எனவே​தான், நிதிப்​பகிர்வு முறை​யில் புதிய மற்றும் நியாயமான அணுகு​முறையை நாங்கள் முன்​வைக்கிறோம். உதாரண​மாக, 15-வது நிதிக்​குழு மாநிலங்​களுக்கு 41% வரிப்​பகிர்வு அளிக்க வேண்​டும் என்று பரிந்​துரைத்​தது. ஆனால், முதல் 4 ஆண்டு​களுக்கு மத்திய அரசின் வருவா​யில் 33.16 சதவீதம் மட்டுமே பகிரப்​பட்டது. வரி மற்றும் கூடுதல் கட்ட​ணங்களை மத்திய அரசு உயர்த்தியதே பகிர்​வில் ஏற்பட்ட இந்த வீழ்ச்​சிக்​குக் காரண​மாகும்.

மாநில பகிர்வை உயர்த்​துதல்: மாநிலங்கள் மக்களுக்கான பல்வேறு வளர்ச்​சித் திட்​டங்களை செயல்​படுத்​தும்​போது, அவற்றுக்கான மத்திய நிதி​யும் அதற்​கேற்ப உயர்த்​தப்பட வேண்​டும். மத்திய திட்​டங்​களுக்கான கூடுதல் நிதி மற்றும் மத்திய அரசின் குறைந்த நிதிப்​பகிர்வு ஆகிய இரண்​டும் மாநிலங்கள் மீதான வரிச்​சுமைக்கு காரண​மாகும். எனவே​தான், மத்திய வரி வருவா​யில் இருந்து மாநிலங்​களுக்கு 50 சதவீத வரிப்​பகிர்வு வழங்​கப்பட வேண்​டும் என கோரு​கிறோம். இது மாநிலங்கள் நிதி சுயாட்​சி​யுடன் செயல்​பட​வும், மக்களுக்கான திட்​டங்களை அறிமுகப்​படுத்​த​வும் உதவும்.

கடந்த 45 ஆண்டு​களாக, கிடைமட்ட வரிப்​பகிர்வு முறை​யின் மூலம் பின்​பற்றி வந்த மறுபங்​கீட்டுக் கொள்கை, வளர்ச்​சிக்​குப் பெரிய அளவில் உதவவில்லை. எனவே, குறைந்த தேசிய பொருளாதார வளங்​களு​டன், வளர்ச்​சி​யில் பின்​தங்கிய மாநிலங்​களுக்கு பெரிய பங்கை வழங்​கு​வ​தில், கவனம் செலுத்தப் போகிறோமா? அல்லது பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்​களு​டன், அனைவருக்​கும் அதிகமான வளங்​களைப் பகிர்ந்​தளிக்​கும் சமமான பங்கீட்டுக் கொள்​கையை பின்​பற்று​வ​தில் கவனம் செலுத்தப் போகிறோமா? என்பது​தான் மிகப்​பெரிய கேள்வி. இதற்கான விடை சிக்​கலானது.

இருப்​பினும் இதில் சமச்​சீரான அணுகு​முறையே, வளர்ச்​சி​யில் பின்​தங்கிய மாநிலங்​களுக்​குத் தேவையான பகிர்வை அளிக்​க​வும், முன்னேற்றப் பாதை​யில் இருக்​கும் மாநிலங்​களின் வளர்ச்​சியை மேலும் ஊக்கு​விக்கத் தேவையான வளங்களை பகிர்ந்​தளிக்​க​வும் உதவும். வளர்ச்​சி​யடைந்த மாநிலங்​களுக்கு இதுபோன்ற வரிப்​பகிர்வு முறையே அவசி​யம்.

இதற்​கிடை​யில், தமிழகம் போன்ற வளர்ச்​சி​யடைந்த மாநிலங்கள் மக்கள்​தொகை மற்றும் நகரமய​மாதல் போன்ற தனித்து​வமான சவால்களை எதிர்​கொண்டு வருகின்றன. தேசிய சராசரியை விட வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வயதானவர்​களுக்கான ஆதரவு திட்​டங்​களுக்கான செலவுகள் அதிகரிக்​கும் நிலையில், நுகர்வு அடிப்​படையிலான வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதுபோன்ற மாநிலங்கள் வளர்ச்​சியில் தேக்​கமடை​யும், ‘நடுத்தர வருமான மாநிலம்’ எனும் பொறிக்​குள் சிக்​காமல் இருப்பதை உறுதிப்​படுத்த வேண்​டியது அவசி​யம்.

வேகமான நகரமயமாதல் சவால்: அதேபோல், தமிழகம் போன்ற மாநிலங்கள் நாட்​டிலேயே வேகமாக நகரமய​மாதல் அதிகரிக்​கும் சவாலை எதிர்​கொண்​டுள்ளன. இதனால், 2031-ம் ஆண்டு, நகர்ப்புற மக்கள்​தொகை 57.30 சதவீதம் என கணிக்​கப்​பட்​டுள்​ளது. இது அப்போதைய தேசிய சராசரியான 37.90 சதவீதத்​தைவிட அதிகமாக இருக்​கும். எனவே, எதிர்கால நகரமய​மாதலுக்​குத் தேவையான உள்கட்​டமைப்பு வசதி​களுக்​குத் தேவைப்​படும் வளங்களை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

அதேநேரம், நிதிக்​குழு​வின் பரிந்​துரைகள் பொருளா​தாரக் கணக்​கு​களுக்கு அப்பாற்​பட்டது என்ப​தை​யும் நினை​வில் கொள்ள வேண்​டும். உற்பத்​தியை ஊக்கு​விப்​பது, நகரமய​மாதல் சவால்களை எதிர்​கொள்வது அல்லது காலநிலை மாற்​றத்​தைக் கை​யாள்வது என எதுவாக இருப்​பினும், நி​திக்​குழு​வின் பரிந்​துரை கோடிக்​கணக்கான மக்​களின் வாழ்க்கை​யில் ​தாக்​கத்தை ஏற்​படுத்து​வதுடன், உலகின் ​முன்னணி பொருளா​தார நாடு​கள் வரிசை​யில் இந்தியாவை நிலைநிறுத்​தத் தேவையான பாதையை​யும் தீர்​மானிக்​கிறது என்பது குறிப்​பிடத்தக்கது.

- முதல்வர் மு.க.ஸ்​டா​லின்

x