குடிசைமாற்று வாரிய ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு: பட்டினப்பாக்கத்தில் சாலை மறியல்; ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


சென்னை: குடிசை மாற்று வாரிய குடி​யிருப்​பின் ஜன்னல் மேற்​கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்​தில் நீதி கேட்டு அவரது உறவினர்​களும், பொது​மக்​களும் பட்டினப்​பாக்​கம், சாந்​தோம் நெடுஞ்​சாலை​யில் சாலை மறியலில் ஈடுபட்​டனர். சென்னை பட்டினப்​பாக்​கம், சீனிவாசபுரத்​தில் உள்ள குடிசை​மாற்று வாரிய குடி​யிருப்​பின் 6-வது பிளாக்​கில் வசித்து வந்தவர் சையத் குலாப் (23).

எலக்ட்​ரீஷியனான இவர் பாரி​முனை​யில் உள்ள தனியார் நிறு​வனம் ஒன்றில் பணி செய்து வந்தார். இந்நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு பணி முடிந்து வழக்​கம்​போல் வீடு திரும்​பினார். இரவு 9.30 மணியள​வில் வீட்​டருகே வந்த​போது, அக்குடி​யிருப்​பின் 134-வதுபிளாக் மூன்​றாம் தளத்​தில் ஜன்னல் மேற்​கூரை (சிமென்ட் ஸ்லாப்) இடிந்து சையத் குலாப் தலையில் விழுந்​தது. பலத்த காயம் அடைந்த அவரை அவரது குடும்பத்​தினர் மீட்டு ராயப்பேட்டைஅரசு மருத்​துவ​மனைக்கு அனுப்பிவைத்​தனர்.

பரிசோ​தித்த மருத்துவர்சையத் குலாப் வரும் வழியிலேயே இறந்து விட்​டதாக தெரி​வித்​தார். இந்த சம்பவம் குறித்து பட்டினப்​பாக்கம் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரணை மேற்​கொண்​டனர். இந்நிலை​யில், குலாப்​பின் மரணத்துக்கு நீதி கேட்டும் குடும்பத்​திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்​கவும், குடும்பத்​தில் ஒருவருக்கு அரசு வேலை​யும், புதிய குடி​யிருப்புகளை அதே இடத்​தில் கட்டித்தர நடவடிக்கை​யும் எடுக்க வேண்​டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என சுமார் 300-க்​கும்மேற்​பட்​டோர் பட்டினப்​பாக்கம் சிக்னல் சாந்​தோம் நெடுஞ்​சாலை​யில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்​டனர்.

தகவல் அறிந்து பட்டினப்​பாக்கம் போலீ​ஸார், மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு, மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரிஹர பிரசாத், மாநக​ராட்சி மற்றும் நகர்புற மேம்பாட்டு வாரியஅதிகாரிகள் அங்கு விரைந்து பேச்சு​வார்த்​தையில் ஈடுபட்​டனர். பேச்சு​வார்த்தை சுமூகமாக முடியவே அனைவரும் கலைந்து சென்​றனர். இப்​போராட்​டத்​தால் அப்​பகு​தி​யில் சு​மார் 2 மணி நேரத்​துக்கும் மேலாக ​போக்கு​வரத்து பா​திக்​கப்​பட்​டது.

இந்நிலையில் அமைச்சர் தா.மோ.அன்​பரசன் வெளி​யிட்ட அறிவிப்பு: தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரி​யத்​தால் சென்னை பட்டினப்​பாக்கம் சீனிவாசபுரம் திட்​டப்​பகு​தி​யில் 1965-77 ஆண்டு வரை 6.20 ஹெக்​டேர் பரப்​பள​வில் 1,356 அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் கட்டப்​பட்டு பயனாளி​களுக்கு ஒதுக்கப்பட்டன.

கடந்த 60 ஆண்டு கால பயன்​பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்​பாட்​டாலும் கட்டிடம் சிதலமடைந்த நிலை​யில் இருந்​தது. இக்கட்​டடங்களை அகற்றி, மறுகட்டு​மானம் செய்ய பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது. இதை நிறைவேற்றும் வகையில் 2022 ஜன.20 முதல் மார்ச் 9 வரை குடி​யிருப்புகளை காலி செய்ய வாரி​யத்​தால் அறிவிப்​பாணைகள் வழங்​கப்​பட்​டது.

ஆனால், பொது​மக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் நடத்தப்பட்ட பேச்சு​வார்த்​தைகளில் குடியிருப்பை காலி செய்​வ​தில் சுமுக தீர்வு எட்டப்​பட​வில்லை. இந்நிலை​யில், நேற்று முன்​தினம் நடந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்​துள்ளார்.

அவரது குடும்பத்​துக்கு அரசின் சார்​பில் ஆழந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​வதுடன் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வாரி​யத்​தால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடி​யிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்​தில் பழைய குடி​யிருப்புகளை இடித்து​விட்டு வாரி​யத்​தால் புதிய குடி​யிருப்புகள் கட்டித்தரப்படும். இடைப்​பட்ட காலத்​துக்கு ஒரு குடும்பத்​துக்கு ரூ.24 ஆ​யிரம் கருணைத் தொகையாக வழங்​கப்​படும்​ என்று தெரித்துள்ளார்​.

x