புயல் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டங்​களில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்​கொண்டு வருகிறது. மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்டு நிவாரண முகாம்​களில் தங்கவைக்​கப்​பட்​டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசால் வழங்​கப்​பட்டு வருகின்றன.

மழைக் காலங்​களில் ஏற்படும் தொற்று நோய்​களி​லிருந்து மக்களைப் பாது​காக்​கும் வகையில், சுகா​தா​ரத்​ துறை மூலம் மருத்துவ முகாம்​களும் நடத்​தப்​பட்டுவருகின்றன. அத்துடன், தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன.

இந்நிலை​யில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட மாவட்​டங்​களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் மு.க.ஸ்​டா​லின், நேற்று தலைமைச் செயல​கத்​தில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத ஊதியத்​துக்கான காசோலையை தலைமை செயலர் நா.​முரு​கானந்​தத்​திடம் வழங்​கினார். தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்​குறிப்பில் இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

x