ராமேசுவரம்: விசைப்படகுகளில் சீன இன்ஜின்களை பயன்படுத்த தடை!


பிரதிநிதித்துவப் படம்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் விசைப்படகுகளில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை விசைப்படகுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்லப்பா தலைமையில் அனைத்து விசைப் படகு சங்க தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை (சினோடிரக் மற்றும் வெச்சாயி) படகுகளில் பொறுத்தக்கூடாது, என ஒரு மனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் பதிவு இல்லாமலும் அதிக குதிரை திறன் கொண்ட மூன்று படகுகள் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவினை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பியது கண்டறியப்பட்டதால், மூன்று விசைப் படகுகளுக்கு ராமேசுவரம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் தொழில் முடக்க ஆணையும் வழங்கப்பட்டது.

x