தொழில்​நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்​எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தள்ளிவைப்பு


சென்னை: தொழில்​நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்​எல்வி சி-59 ராக்​கெட் ஏவுதல் இன்று (டிச. 5) மாலை 4.12 மணிக்கு தள்ளிவைக்​கப்​பட்​டுள்ளதாக இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (இஸ்ரோ) ஓர் அங்கமான நியூஸ்​பேஸ் இந்தியா லிமிடெட் (Newspace India Limited) அமைப்பு மூலமாக வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்கள் வணிகரீ​தியாக விண்​ணில் செலுத்​தப்​பட்டு வருகின்றன.

இதற்​கிடையே சூரியனின் வெளிப்பு​றத்தை ஆராய்​வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்​கைக்​கோளை ஐரோப்பிய விண்​வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறு​வனம் வடிவ​மைத்​தது. இந்த செயற்​கைக்​கோளை பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலமாக விண்​ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறு​வனத்​துடன், இஸ்ரோ​வின் என்எஸ்​ஐஎல் அமைப்​பானது புரிந்​துணர்வு ஒப்பந்தம் மேற்​கொண்​டது.

அதன்படி ப்ரோபா-3 செயற்​கைக்​கோள், பிஎஸ்​எல்வி சி-59 ராக்​கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவு தளத்​திலிருந்து நேற்று மாலை 4.08 மணிக்கு விண்​ணில் ஏவப்பட இருந்​தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று முன்​தினம் தொடங்​கியது. ராக்​கெட்டை செலுத்து​வதற்கான இறுதிக்​கட்ட பணிகளில் விஞ்​ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடைசி நேர சோதனை​களில் ப்ரோபா-3 செயற்​கைக்​கோளில் சில தொழில்​நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்​பட்​டது.

இதையடுத்து ராக்​கெட் ஏவுதல் இன்று (டிச. 5) மாலை 4.12 மணிக்கு தள்ளிவைக்​கப்​படு​வதாக இஸ்ரோ அறிவித்​தது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் இந்திய விஞ்​ஞானிகள் இணைந்து தொழில்​நுட்பக் கோளாறை சரிசெய்​யும் பணிகளை மேற்​கொண்டு வருகின்​றனர். ப்ரோபா-3 செயற்​கைக்​கோள்கள் புவியி​லிருந்து 60,500 கி.மீ. தொலை​வில் உள்ள சுற்று​வட்டப் பாதை​யில் நிலைநிறுத்​தப்பட உள்ளன.

அங்கிருந்​த​படியே 2 செயற்​கைக்​கோள்​களும் 150 மீட்டர் தூரத்​தில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகு​தியை ஆய்வு செய்து தர​வுகளை அனுப்ப உள்ளன என்​ப​து குறிப்பிடத்தக்கது.

x