குன்னூர்: நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்


குன்னூர்: மழையின் காரணமாக இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை இன்று முதல் வழக்கம் போல இயங்க தொடங்கியது.

வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தென்னக ரயில்வே துறை சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுருக்கும், குன்னூரில் இருந்து உதகை வரையிலும் இயக்கப்படும் அனைத்து மலை ரயில்களும் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கம் போல் குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலையிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்படும் மலை ரயிலும் இயங்க தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x