போப் பிரான்சிஸ் உடன் திமுக எம்எல்ஏ சந்திப்பு


வாடிகனில் அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை சந்தித்து ஆசி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

திருச்சி: அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை, அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் வாடிகனில் சந்தித்து உரையாடினார்.

அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் கிறிஸ்தவர்களின் நிலை, தமிழகத்தில் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களுக்கு நிறைவேற்றப்படும் சீர்மிகு திட்டங்கள் குறித்தும், அதனால் அவர்களின் ஏற்றமிகு வாழ்க்கை சூழல் குறித்தும் எடுத்துரைத்ததோடு, போப்பை இந்தியாவிற்கு வருமாறு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அழைப்பு விடுத்தார்.

இந்திய வருகையின் போது, தவறாமல் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும், தங்களை வரவேற்பதற்காக தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

x