கரூர்: பருவமழையையொட்டி, கரூர் நீதிமன்றத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகத்தை கூடுதல் மாவட்ட நீதிபதி பி.தங்கவேல் தொடங்கி வைத்தார்.
பருவ மழைக் காலங்களில் நோய் பரவல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கரூர் மாவட்ட மருத்துவமனை சித்தா பிரிவு இணைந்து, கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று (டிச.3ம் தேதி) காலை 9.45 மணிக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தங்கவேல், விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் ஆகியோர் நிலவேம்பு குடிநீரை வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து நீதிமன்றத்திற்கு வந்த அனைவருக்கும் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா செய்திருந்தார்.