கரூர்: சுவாமி ஐயப்பனை அவமதித்து பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது இந்து முன்னணி சார்பில் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று (டிச. 3ம் தேதி) கரூர் நகர காவல் நிலையத்தில் மாநகர தலைவர் த.கணேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘இந்துக்களின் கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் தேவையற்ற மத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் தனது பாடல்களின் வரிகள் மூலம் வீண் மோதல்களை பரப்பிக் கொண்டிருக்கும் நீலம் பவுண்டேஷன் என்ற அமைப்பினை சார்ந்த இசைவாணி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மத வெறுப்பினை ஏற்படுத்தும் சூழலை தடுத்திடுமாறும் இந்து முன்னணி சார்பாகவும், ஐயப்ப பக்தர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.