சென்னை: அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இரு நாட்களுக்கும் மேலாக மழை, வெள்ள சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகனமழையால் கடுமையான மழைப்பொழிவை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கும் மேலாக மழை, வெள்ள சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாடுகள் உயிரிழப்புக்கு ரூ.37,500 நிவாரணமும், ஆடுகள் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம், கோழிகள் இறப்புக்கு ரூ.100 நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.