தங்கம் விலை கிடுகிடு உயர்வு: சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,130க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பின் படி ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் ரூ.57,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த தீபாவளியன்று உச்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ.59,640க்கு விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் தொடர் ஏற்றத்தைக் கண்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதார மந்த நிலை, டாலர் மதிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, பங்குசந்தை நிலவரத்தின் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து மாறி, மாறி வருவதாக கூறப்படுகிறது.

x