ரூ.5 கோடி மதிப்புள்ள கூடலழகர் கோயில் நிலம் மீட்பு


மதுரை: மதுரை கூடலழகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் இன்று (டிச.2) மீட்கப்பட்டது.

மதுரை கூடலழகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மதுரை கிழக்கு வட்டத்திற்குட்பட்ட அங்காடிமங்கலம் கிராமத்தில் 6.39 ஏக்கர் நன்செய் நிலங்கள் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த நிலத்தை மீட்க சென்னை நில நிர்வாக ஆணையர் உத்தரவில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

அதன்படி, கூடலழகர் கோயில் உதவி ஆணையர் பி.எஸ்.லோகநாதன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் எஸ்.சிவக்குமார், கோயில் கண்காணிப்பாளர் சீ.செந்தில்குமார் மற்றும் அறநிலையத் துறை நில அளவையர்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோருடன் நிலங்களை மீட்டனர். இதன் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.

x