திருச்செந்தூர் ரயில் விழுப்புரத்திலிருந்து புறப்படும் - ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அறிவிப்பு!


சென்னை: கனமழை காரணமாக சென்னை - விழுப்புரம் மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையேயான ரெயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர் ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் நேற்று (நவம்பர் 30) முன்தினம் புதுச்சேரி அருகே மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இந்நிலையில், கனமழையால் விழுப்புரம், விக்கிரவாண்டி ரயில்வே வழித்தடங்களிலுள்ள தாண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரெயில் இன்று விழுப்புரத்தில் இருந்தே புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11.55-க்கும் புறப்படும். அதேபோல சென்னையில் இருந்து கொல்லம், ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில்களும் இன்று ஒருமணி தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையேயான ரயில்வே பாலம் மழை நீரில் மூழ்கியுள்ளதால், சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக, வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி - சென்னை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. அதேபோல், சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

x